பாரினில் சிறந்த தேச மாம் பாரதத்தில் கொங்குநாடு கொண்ட கோவையம்பதியில், திருக்குடந்தைக்கு ஒப்பாக ஊரெங்கும் கோவில்களால் சூழப்பட்டு, வேளாண் குடிகள் செழித்து வாழ்ந்த வேளாளன் குறிச்சி (தற்பொழுது விளாங்குறிச்சி) என்னும் கிராமத்தில் திருக்கயிலை நாதன் ஆடலரசன் ஆனந்தக்கூத்தன் இங்கு ஸ்ரீ பகவதீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு ஸ்ரீபகவதீஸ்வரி அம்பிகையோடு உடன் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார்.
திருக்கோவில் பழமை குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கூளையகவுண்டர் என்னும் சிவனடியார் ஆல் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் சிறப்பாக நடை பெற்று வந்தது.
பின்பு பொதுமக்கள் ஒன்றிணைந்து கடந்த 2000 ஆம் வருடம் திருக்கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று, சுதைகள் மற்றும் சுற்றுப் பிரகார சிற்பங்கள் நிறுவப்பட்டு எம்பெருமானுக்கு திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக செய்யப்பெற்றது.
அதன் பின்னர் 2017 ஆம் வருடம் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் உதவியால் திருக்கோவில் சிதிலம் நீக்க பெற்று புதுப்பொலிவுடன் ஆகம முறைப்படி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

No comments:
Post a Comment